4 கோடி கொடுத்தும் அப்படி நடிக்கமாட்டேன்னு சொன்ன சாய் பல்லவி – 50 லட்சத்திற்கு நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

20 August 2020, 1:00 pm
Quick Share

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி, ‘இந்தியர்கள் நிறம் இது தான், நாம் ஏன் வெளிநாட்டவர்களை போல் மாற வேண்டும். இந்தியர்களாக இயல்பாகவே இருக்கலாம். எப்போதும் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், அதே விளம்பரத்தை வெறும் 50 லட்சம் சம்பளமாக வாங்கி கொண்டு நடித்து கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.