தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான படம் சாட்டை. இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான யுவன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் அறியப்பட்டார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பட வாய்ப்புகள் யுவனுக்கு வந்தது. இவர் இளமை, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் சாட்டை படம் கொடுத்த அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு மற்ற படங்கள் கொடுக்கவில்லை. இதற்கு, பிறகு இவர் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படமும் கைவிடப்பட்டது. தற்போது, யுவன் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் எல்லா நடிகர்களுக்கும் பாலா படத்தில் நடிப்பது கனவாக இருக்கும். எனக்கும், அப்படி ஒரு கனவு இருந்தது. அந்த கனவு காண வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால் நானாக சினிமாவில் ஒரு கேப் எடுத்துக்கொண்டேன். பின்பு கொரோனா காலகட்டம் என எல்லாம் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. பாலா சார் படத்திற்காக நான் போட்ட முயற்சிகள் எல்லாம் வெளியில் யாருக்கும் தெரியாது. பலரும் அந்த படத்தைப் பற்றி பேசும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அந்தப் படத்தில் நான் ஹோட்டலில் வேலை செய்யும் ஒரு பையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதனால், நான் நாகூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து பரோட்டா போட, காய்கறி கட் பண்ண, டீ போடலாம் கற்றுக் கொண்டேன். கடையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நான் நடிப்பதற்காக கற்றுக் கொண்டேன் என்பது தெரியும். கடைக்கு வருபவர்களுக்கு யாருக்குமே என்னை தெரியாது.
ஒரு பெரிய டி ஷர்ட் எல்லாம் போட்டுக்கொண்டு அந்த கடையில் வேலை செய்யும் பரோட்டா மாஸ்டர் போலவே இருந்தேன். படத்தில் நடிக்கப் போறோம் என்று ஆர்வத்தில் அனைத்தையும் செய்து முடித்தேன். அதற்குப் பிறகு படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் தேதியின் அறிவிப்பு வரை வந்தது. ஆனால், அதற்கு முன்பு படம் கொஞ்ச நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாச்சியார் படத்தை பாலா சார் எடுக்க ஆரம்பித்து விட்டார். அது முடிந்த பிறகு மீண்டும் இந்த படத்தை எடுப்பார் என்று நினைத்தேன்.
ஆனால், அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக சொல்லிவிட்டார்கள். இது நடந்து முடிக்கவே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. பாலா சார் படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், அவருடன் இணைந்து வேலை செய்த அனுபவம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும், பாலா சார் படத்தில் நடிக்க தான் பரோட்டா போட கற்றுக் கொண்டேன். கடைசியில் அதுவே என் வாழ்க்கையில் பரோட்டா மாஸ்டராகவே என்னை மாற்றி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.