தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இறந்த தனது மகளின் கடைசி தருணங்களை குறித்து, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவர் மனைவி சோபா ஆகியோர் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பேட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வருதத்துடன் பேசி வருகிறார்.
இதுகுறித்து, தன் மனைவி ஷோபாவுடன், பேட்டி ஒன்றில் இறந்து போன தனது மகள் குறித்து சோகமான தருணங்களை, உருக்கத்துடன் கூறியுள்ளார்.
அதாவது, தனது மகளுக்கு நோய் இருப்பது தெரிந்து, மிகவும் கவனத்துடன் பார்த்து வந்ததாகவும், ஏவிஎம் உள்ளிட்ட எந்த இடத்துக்கு ஷூட்டிங் சென்றாலும், மகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றதாகவும்,
ஒரு நாள் தான் ஷூட்டிங் கிளம்பும்போது, திடீரென தன் கையைப் பிடித்துக் கொண்டு அப்பா என் கூடவே இருங்க என அழுதாள் என மிகவும் உருக்கத்துடன் கண்கலங்கி தெரிவித்தார். அப்படியே கொஞ்ச நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. இதனால், நாங்களும் அவளை தூக்கிக்கொண்டு ஓடினோம்.
இருந்தாலும் கடைசி நேரத்தில் தன் மடியிலேயே, மகளின் உயிர் பிரிந்து விட்டது என்றும், விஜய்க்கு தங்கையை பிரிந்த அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது. இதை மட்டும் எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என இருவரும் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.