10 ஆண்டுகளுக்குள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்!

26 January 2021, 5:57 pm
Quick Share

தளபதி விஜய் 10 ஆண்டுகளுக்குள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இயக்குநரோடு அல்லாமல் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். அண்மை காலமாக விஜய்யை அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது விஜய் மக்கள் இயக்கத்தை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்தார்.

இது குறித்து அறிந்த தளபதி விஜய், எனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எஸ் ஏ சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் கட்சி தொடங்குவதே விஜய்க்காகத்தான். இன்று இல்லை என்றால், என்றாவது ஒருநாள் அது அவருக்கு புரியும்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி தொடங்கினேன். அதுவும், அவருக்காகத்தான். ஆனால், அவரை யாரோ குழப்பி வருகிறார்கள். மக்களுக்கு நல்ல அரசியல்வாதிகள் தேவை. 10 ஆண்டுகளுக்குள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். எனக்காக நான் எதையும் செய்யவில்லை. எனக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது. இந்த வயதில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு கிடையாது.
தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் வணிக நோக்கத்திற்காக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது, ரூ.100க்கு டிக்கெட் வாங்கி அதனையே ரூ.1000க்கு விற்கிறார்கள். இது வருத்தமளிக்கிறது. நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். இதில், சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். விரைவில், ஓய்வு பற்றி அறிவிக்க இருக்கிறேன். விஜய்யின் மாஸ்டர் படம் மக்களுக்கு கொரோனா பற்றிய அச்ச உணர்வை மறக்கச் செய்துள்ளது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0