தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சாய் பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் “தண்டல்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி தற்போது “இராமாயணம்” திரைப்படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் பாலிவுட் திரைப்படம் என்றாலும் பேன் இந்தியாவாக இது உருவாகி வருகிறது. இதன் மூலம் சாய் பல்லவி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.
தனது கதைத்தேர்வில் மிகவும் கவனமாக செயல்படுபவர்தான் சாய் பல்லவி. இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கதையம்சத்துடன் அமைந்திருக்கும். அதில் இவருக்கு முன்னணி கதாபாத்திரமும் இருக்கும். உதாரணமாக சிவகார்த்திகேயனின் “அமரன்” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. அதற்கு முன்பு வெளிவந்த “கார்கி”, “ஷ்யாம் சிங்கா ராய்” போன்ற திரைப்படங்களையும் உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சாய் பல்லவி “என்னுடைய பயோபிக்கிற்கு என்னிடம் டைட்டில் கேட்டால் நான் ‘50 Shades of Pallavi’ என்றுதான் டைட்டில் வைப்பேன். ஏனென்றால் நான் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி இருப்போம். எனது நண்பர்களிடம் இருக்கும்போது நான் ஒரு மாதிரி இருப்பேன். எனது பெற்றோருடன் இருக்கும்போது வேறு மாதிரி இருப்பேன். அதே போல் படப்பிடிப்பு தளத்தில் ஒரு மாதிரி இருப்பேன். ஆதலால் ‘50 Shades of Pallavi’ என்ற டைட்டில் சரியாக இருக்கும்” என கூறினார். இவரது இப்பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.