“அவசரபட்டுட்டியே சம்மு குட்டி” – குளியல் தொட்டியில் சமந்தா வெளியிட்ட பிகினி புகைப்படம் !

25 November 2020, 1:00 pm
Quick Share

கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்ப விழாக்களை புறக்கணித்து வருவதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து டோலிவுட் வட்டாரத்தில் முணு முணுக்கப்பட்டது. அதாவது, கடந்த வருடம் நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தின் மூத்த மருமகளான சமந்தா இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

‘The Family Man 2’ படப்பிப்பில் பிசியாக இருந்ததாக கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். இதனால் நாகார்ஜூனா குடும்பம் மனம் வருந்தி வருகிறாராம், இது தெரிந்தும் சமந்தா கண்டுகொள்ளாமல் படத்தில் நடித்து வருகிறாராம். நாகார்ஜூனா எடுத்து சொல்லியும் அம்மணி அதேதான் செய்கிறாராம். இது போன்று தொடர்ந்து நடந்துகொண்டதால் சமந்தாவிற்கும் சைதன்யா குடும்பத்திற்கும் மனக்கசப்பு இருப்பதாகவும், மேலும் கணவர் நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என செய்திகள் வந்துள்ளது. இதெல்லாம் பக்கா வதந்தி என சமந்தா சிரித்துக்கொண்டே புறக்கணிக்கும் வகையில் பதில் கூறினார்.

தற்போது மாலத்தீவில் உல்லாசமாக இருக்கும் சமந்தா குளியல் தொட்டி நுரை ததும்ப ததும்ப ரோஜா பூ வாசம் கமழ, கமழ பிகினியில் செல்பி புகைப்படம் என்று எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள். ” அவசரப்பட்டுடியே சம்மு குட்டி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 41

0

0