‘புஷ்பா’ படத்தில் என்ட்ரியாகும் சமந்தா: ஒரே பாட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா…!!

Author: Aarthi Sivakumar
17 November 2021, 3:14 pm
Quick Share

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன் . புதிதாக திரைக்கு வரவிருக்கும் அவரது படமான “புஷ்பாவிற்கு ” ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதற்கு காரணம் நடிகை சமந்தா தான்.

ஏனென்றால் இப்படம் சமந்தாவிற்கு விவாகரத்திற்கு பின்னான முதல் படமாகும். நாகா சைதன்யா உடனான மன வாழ்க்கை முறிந்த பின் மீணடும் திரையுலகில் சமந்தா ஒரு ரவுண்டு வருவார் என சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்க படுகிறது.

அதற்கு தீனி அளிக்கும் விதமாக புஷ்பா படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் புஷ்பா. பகத் பாஷில் , ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் சாமி பாடல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. இதில், ராஷ்மிகா தாறுமாறான கவர்ச்சியை தாராளமாக வழங்கி இருந்தார்.

இந்நிலையில், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார் சமந்தா. ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு சமந்தா தள்ளபட்டத்தற்கான காரணம் என்ன என்று நெட்டிசன்கள் சமூக வலைதளைங்களில் பட்டிமன்றமே நடத்தி வருகிறார்கள்.

விவாகரத்திற்கு பின்னான அவரது கேரியரை தூக்கி நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த பாடல் அமையும் என்று பல தரப்பிலிருந்தும் தகவல்கள் கசிகின்றன. மேலும், சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால், இந்தப் பாடலை மிகவும் ஸ்பெஷலாகப் படமாக்க உள்ளார்களாம். சமந்தாவோ ஹாயாக ஒன்றை கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒரு படத்திற்கான சம்பளத்தை ஒரு பாடலுக்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் உடல்நிலை முன்னேறி வரும் நிலையில் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இதற்கு படக்குழு தான் பதிலளிக்க வேண்டும்.

Views: - 402

0

0