கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.
இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, விவகாரத்து செய்யப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது அவருடைய தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம். சென்னையில் இருந்த சமந்தாவின் தாய், உடனடியாக ஹைதராபாத் சென்று சமந்தாவை பார்த்துக்கொண்டு, தற்போது வரை சமந்தாவுடன் தான் இருக்கிறாராம்.
இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கேரியர் சம்பந்தமான விசயங்களை சமந்தா பகிர்ந்து வருகிறார்.
மேலும், மயோசிடிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டும் வர குஷி படத்திற்கு பின் சின்னதாக பிரேக் எடுக்கவும் உடல் நிலை முழுமையாக குணமடைய இதை செய்ய இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழில் வாய்ப்புகள் வரவில்லை யாரும் கூப்பிடவில்லை என்று சமந்தா கூறியது ரசிகர்களிடையே, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.