சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு இந்த நடிகை தான் காரணமா..? சமந்தாவுக்கு இத்தனை கோடி ஜீவானம்சமா..?

Author: Babu Lakshmanan
2 October 2021, 5:15 pm
samantha naga chaitanya cover - updatenews360
Quick Share

பொதுவாக ஒரு திரையுலக பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது என்பதில் பெரிய ஆச்சர்யம் இருக்காது. திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் எத்தனை காலம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதே பெரிய விஷயமாகும். அதில், சில பிரபலங்களின் குடும்பங்கள் இன்னும் கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருகின்றன.

இதை சொல்வதற்கு காரணம், நீண்ட நாட்களாக பேசு பொருளாக இருந்து வந்த நடிகர் நாகர்ஜுனின் மகன் நாக சைதன்யா – மருமகள் சமந்தாவின் விவகாரத்துதான்.

விண்ணைத் தாண்டி வந்த காதல்

Manam song Kanulanu thaake making : Naga Chaitanya and Samantha have a  blast! - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers & Videos at  Bollywoodlife.com

தமிழிலில் சிம்பு – திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில்தான் சமந்தா – நாக சைதன்யா அறிமுகமாகிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜீவா – சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ரீமேக்கிலும் இவர்களின் ரீல் காதல் தொடர்ந்தது. இதனால், சமந்தா – நாக சைதன்யாவுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

ஆடம்பர திருமணம்

அதன்படி, கோவாவில் மிகவும் கோலாகலமாக நடந்த திருமணத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 2017 அக்டோபர் 6ந் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் ரூ. 10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து வதந்தி குறித்த விவகாரம் தொடர்ந்து பேசும் பொருளாக இருந்து வந்தது. ஆனால், இது குறித்து மறுப்போ, ஆதரவோ தெரிவிக்காமல், இருவரும் அமைதியே காத்து வந்தனர். இதனால், விவாகரத்துக்கு சமந்தா ஜீவனாம்சம் கேட்டுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.

கிளாமரில் ஆர்வம்

அதேவேளையில், இந்தியில் சமந்தா நடித்த தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், அவருக்கு பாலிவுட் வாய்ப்புகளும் தேடி வந்தது. இதனால், அவர் மட்டும் மும்பை சென்று செட்டில் ஆக இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. அதேவேளையில், கடந்த சில நாட்களாக அவர் நடிக்கும் படங்களில் கிளாமரும், பெட்ரூம் காட்சிகளும் அதிகமாகவே இருந்து வருகிறது. இது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று போலும்.

இது ஒரு பக்கம் இருக்க, மாமனார் நாகார்ஜுனாவின்பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா பங்கேற்காதது, சக நடிகர், நடிகைகளுக்கு சமந்தா கொடுத்த பார்ட்டியில் நாக சைதன்யா பங்கேற்காதது என அடுத்தடுத்த சில நிகழ்வுகளால், இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருந்தது.

அண்மையில், நாகர்ஜுனாவின் டிவி ஷோ ஒன்றை பகிர்ந்த சமந்தா, சூப்பர் மாமா என்று பதிவிட்டிருந்தது, இன்னமும் நான் அவருக்கு மருமகளாகத்தான் இருக்கிறேன் என்று மறைமுகமாக சொன்னது போல் இருந்தது. அதேவேளையில், திருப்பதி கோவிலுக்கு சென்ற சமந்தாவிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், மிகவும் காட்டமாக புத்தி இருக்கா என கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து அறிவிப்பு

ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தினரும் தலையிட்டு இருவரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாம். பிரிவது என்று முடிவு எடுத்த பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றார்களாம். கவுன்சிலிங்கிற்கு பிறகும் அவர்கள் மனம் மாறவில்லையாம். இந்த நிலையில், தற்போது முதன்முறையாக நாக சைத்தன்யா – சமந்தா இருவரும் கூட்டாக பிரிந்துவிட்டோம் என்று அறிவித்துள்ளனர். இது அவர்கள் இருவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samantha & Naga Chaitanya Have Found A Solution To Stay Together Amid  Divorce Rumours?

ஜீவானம்சம்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம். நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் சமந்தாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.

இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார். விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியது.

நடிகையுடன் காதல்

இதனிடையே, நாக சைதன்யாவுக்கு வேறு ஒரு நடிகையுடன் காதல் மலர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் பிரிந்ததாகவும் மற்றொரு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த நடிகை கூட மலையாளத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் பிரபலமானவர் என்று சொல்லப்படுகிறது.

Naga Chaitanya to work without Breaks

என்னதான் இருந்தாலும் தந்தை நாகர்ஜுனாவைப் போலவே, மகன் நாக சைதன்யாவுக்கு முதல் திருமணம் கைகூடாதது வேதனை அளிப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Views: - 1071

18

5