தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது “மா இண்டி பங்காரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்து நடித்தும் வருகிறார்.
சமந்தா தான் பல ஆண்டுகளாக மையோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.
சமந்தா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். அவர் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற பிறகு பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்தார். இதில் பல துரித உணவுகளின் நிறுவனங்களும் அடங்கும். ஆனால் சமந்தா எப்போதும் உடல் ஆரோக்கியத்தை குறித்தே பேசி வருகிறார்.
இந்த முரண் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர், “நான் சினிமாத் துறைக்குள் நுழைந்தபோது வெற்றி என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்றால், உங்களது முகம் எத்தனை பிராடெக்டுகளில் இருக்கிறது என்பதை பொறுத்துதான். அந்த சமயத்தில் என்னை தேடி பல மல்டி நேஷனல் பிராண்டுகள் வந்தன. அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று நினைத்தேன்.
நான் 20 வயதுகளில் இருந்தபோது துரித உணவுகளை உட்கொண்டிருக்கிறேன். நான் செய்த செயல்களினால் விளைவுகள் ஏற்படாது என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன். நான் இனி விளம்பரப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கடந்த வருடம் மட்டும் 15 பிராண்டுகளுக்காக வந்த விளம்பரங்களை தவிர்த்திருக்கிறேன். அது பலகோடி ரூபாய் வருமானம்” என்று பதிலளித்திருந்தார். சமந்தாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.