ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் இலங்கை அழகி. 2006 ஆம் ஆண்டு நடந்த இலங்கை அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு வெளிவந்த அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய பிலிம் அகாதமி விருதினை வென்றார்.
சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸை ஒரு குற்றவாளியாக அமலாக்க இயக்குநரகம் அறிவித்தது.அதற்குப் பதிலளித்த ஜாக்குலின், தன்னுடைய வருமானம் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்றும் அதற்கு வரியும் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.
2021 டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக பெர்னாண்டஸை 10 மணிநேரம் விசாரித்த அமலாக்க இயக்குநரகம் வழக்கு தொடர்பாக விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அவர் இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்வதைத் தடுக்கும் வழக்கில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தி கோஸ்ட் படத்திலிருந்து பெர்னாண்டஸ் நீக்கப்பட்டார். பணமோசடி வழக்கு காரணமாக படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
26 செப்டம்பர் 2022 அன்று, பெர்னாண்டஸின் வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில், நீதிமன்றம் ஜாக்குலினுக்கு ₹50,000 ஜாமீன் பத்திரத்தின் பேரில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் விலையுயர்ந்த பொருட்கள் பரிசளித்ததாக வாக்கு மூலம் அளித்து இருப்பதால், இந்த வழக்கில் நடிகை ஜாக்குலினிடம் ஐந்து முறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு இதுவரை தன்னிடம் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலும் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு நிரபராதி என்று தொடர்ந்து நடிகை ஜாக்குலின் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.