கேரளா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை சனா கான். மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் , தொடர்களிலும் நடித்திருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் இந்தியில் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து பிரபலமானார்.
இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு சனா கான் ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு’ போன்று சில படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.
பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் 2020 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சனா கான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கணவருடன் சென்ற போது முஃப்தி அனஸ் சனா கானை தர தரன்னு இழுத்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் பலர் அவரது கணவரை கடுமையான சொற்களால் திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள சனா கான், எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. இந்த வீடியோ தவறாக சித்தரிக்கிறது. எங்கள் கார் டிரைவரை எங்களால் அழைக்க முடியவில்லை. அதனால் நான் நீண்ட நேரம் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. இதனால் எனக்கு மூச்சு அடைப்பது போல் உணர்ந்தேன். அதனால் அவர் என்னை அப்பகுதியில் இருந்து விரைவாக அழைத்துச் சென்றார். அது வேறு கோணத்தில் பரப்பப்படுகிறது என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/CrGed4wsqEM/?utm_source=ig_embed&utm_campaign=loading
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.