தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!
கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.
மேலும் படிக்க: மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் சிம்ரன்.. சொத்து மதிப்பை மனச தேத்திட்டு கேளுங்க..!
இந்நிலையில், சமீபத்தில் தனியார் வானொலிக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய தந்தை இறந்தது குறித்து எமோஷனலாக சங்கீதா பேசியுள்ளார். சின்ன சின்ன விஷயத்திற்கு அழுது இருக்கிறேன். ஆனால், அப்பா மரணம் மிகப்பெரிய இழப்பாக இருந்தது. அப்பா திடீரென மறைந்து விட்டார். காலையில், என் கூட இருந்தார் இரவு நான் வரும்போது டெட்பாடியாக இருக்கிறார். யாருக்கும் இந்த நிலைமை வரவே கூடாது தவிர்க்க முடியாத ஒரு வேலையில் இருந்தேன். அப்பா முடியாமல் எனக்கு கால் செய்திருக்கிறார்.
அந்த சமயத்தில், நான் பெரிய தவறு செய்து விட்டேன். அந்த நேரத்தில், என்னிடம் பேச நினைத்தார். ஆனால், என்னால் அட்டென்ட் பண்ண முடியவில்லை. அது என்னுடைய மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அவர் இன்று இல்லாததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனக்கு அது ஒரு தண்டனையாக எடுத்துக் கொண்டேன் என்று சங்கீதா பேசியுள்ளார்.
மேலும், தன்னுடைய அம்மா உன்னால்தான் அப்படி ஆச்சு என்று விளையாட்டாக கூறும்போது கூட, எனக்கு வருத்தமாக இருக்கும். அதனால், பெற்றோர்கள் எப்போதும் பேச நினைத்தாலும் அப்போதே பேசி விடுங்கள். அவர்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள் என்று பேசி இருக்கிறார். மேலும், பேசிய சங்கீதா திருமணத்திற்கு பின் அவரைப் பற்றிய நெகடிவ் மெசேஜ்கள் சமூக வலைதளத்தில் போடுகிறார்கள். நல்ல விஷயத்தை பகிர்ந்தாலும், இதுபோல இல்லாத விஷயத்தை கூறி மாற்றி விடுகிறார்கள். இருவரும் சரியாக புரிந்து கொண்டு வாழ்க்கையை சரியாக கொண்டு செல்கிறோம். ஒரு நல்ல நபர் எனக்கு கிடைத்திருக்கிறார். அதனால், தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் அம்மா மற்றும் என் கணவரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.