ஷாலினியை சந்தித்த சங்கீதா? சஞ்சய் எடுத்த முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2024, 11:42 am
நடிகர் விஜய் மற்றும் அஜித் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தனர். ஆரம்பத்தில் தனது தந்தையின் இயக்கத்தில் நடித்த விஜய், பின்னர் பெரிய பெரிய டைரக்டர்களுடன் இணைந்தார்.
அதே போல தனது உழைப்பால் சினிமாவில் உச்சம் தொட்டார் அஜித். இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
விஜய்யும் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் மகன் சஞ்சய்க்காக ஷாலினியை சந்தித்துள்ளார் விஜய் மனைவி சங்கீதா.
தனது மகன் நடிகராக வரக்கூடாது என விருப்பப்பட்ட சங்கீதா, இயக்குநராக வரவேண்டும் என்பதற்காக லைகா நிறுவனத்திடம் பேசி வாய்ப்பு வாங்கி தர கேட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: நெல்சன் செய்யும் சம்பவம்…ஒன்று சேரும் தனுஷ் – ஐஸ்வர்யா : ரஜினி ஹேப்பி!
லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறது. இதனாலயே லைகா நிறுவனத்திடம் பேசி வாய்ப்பை பெற்றுள்ளார் சங்கீதா. தாயின் கனவை நிறைவேற்ற சஞ்சையும் தீவிரமாக இயக்குநராக அவதாரம் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைகாவும் அதிகாரப்பூர்வமாக சஞ்சய் உடன் பணியாற்றுவது உறுதி செய்தது. இந்த நிலையில் இந்த படத்தில் சுதீப் கிஷான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.