ஒரே Step -இல் Famous ஆன நடிகை – Repeat Mode -ல் பார்க்கும் இளைஞர்கள் – அட இந்த படத்துல கூட நடிச்சு இருக்காரே…!

23 June 2021, 9:42 am
Sanjna Natrarajan - Updatenews360
Quick Share

சமீபகாலமா நம்ம தமிழ்நாட்டுல இருந்தே நிறைய பொண்ணுங்க நடிக்க வராங்க. மீராமிதுன் மாதிரி ஏடாகூடமா பண்ணாம மாடலிங் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர்.

2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை கொடுக்குது.

மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டார் சஞ்சனா நடராஜன். இப்போ சஞ்சனா ரஞ்சித்தின் சர்ப்பேட்டா, தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சிருக்கர்.

ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரும் பாடலுக்கு சஞ்சனா நடனம் ஆடியுள்ளார். சின்ன ஸ்டெப்பாக இருந்தாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக இருந்தது பாபா பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 313

1

2