தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் சந்தானம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் முதலில் குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் நடிகர் சந்தானம் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். நடிகர் சந்தானம் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து கொண்டு வாருடங்களாக ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. கவுண்டமணி செந்தில் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளார்கள். பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் வடக்குப்பட்டி ராமசாமி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சந்தானம் சிவ பக்தர் என்பதை தாண்டி சத்குருவின் சீடர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், சந்தானம், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, சந்தானம் கண்ணீர் சிந்த சிவனை உருக்கமாக வழிபட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.