மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க கேங்கஸ்டர் கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் டிரெயிலரில் காட்டப்பட்ட காட்சி துணுக்குகள் அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம் கூறிய செய்தி ரசிகர்கள் பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜிங்குச்சா” பாடல் சிங்கிளாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இப்பாடல் டிரெண்டிங் பாடலாக உருமாறீய நிலையில் இதில் சான்யா மல்ஹோத்ரா சிம்புவுடன் இணைந்து ஆடிய நடனம் பலராலும் ரசிக்கப்பட்டது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி சான்யா மல்ஹோத்ராவே என்று பல ரசிகர்கள் எண்ணியிருந்தனர்.
ஆனால் சமீபத்திய “தக் லைஃப்” புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம், “சான்யா மல்ஹோத்ரா ஒரு அருமையான டான்சர். டெல்லியில் நடக்கிற இத்திரைப்படத்தின் கதைக்கு ஒரு சின்ன ரோலில் பொருத்தமாக நடித்திருந்தார்” என்று கூறினார்.
“அப்படி என்றால் சிம்புவுக்கு அவர் ஜோடி இல்லையா?” என்று ரசிகர்கள் பலரும் கொதிப்படைந்துள்ளனர். “அப்போ சிம்புவுக்கு யார்தான் ஜோடி?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் ரவி மோகன்…
பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர்…
புரொமோஷனில் தீவிரம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில்…
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கழக…
காதலே தனிப்பெரும்துணையே 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் தழும்ப…
டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி…
This website uses cookies.