சினிமா / TV

ராத்திரில எனக்கு பொண்டாட்டிதான், மத்தவங்களுக்கு எப்படி?- கொதித்தெழுந்த சரத்குமார்! ஏன் இப்படி?

மனைவியிடம் கேட்ட சரத்குமார்?

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். ஒரு நாள் இரவு 2 மணிக்கு தனது மனைவி ராதிகாவுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இவர் அவ்வாறு கூறியதை இணையவாசிகள் ட்ரோலுக்குள்ளாக்கினார்கள். இதனை கேலி செய்து பல மீம்களும் வெளிவந்தன. 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரத்குமார் இதனை குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார். 

மனைவியிடம்தானே கேட்டேன்

“நான் எப்போதும் அரசியல் முடிவுகள் குறித்து ராதிகாவிடம் கேட்டது கிடையாது. ஆனால் ஒரு நாள் இரவு கட்சியை இணைப்பது குறித்தான சஞ்சலத்தில் உட்கார்ந்திருந்தபோது ‘ஏன் இப்படி தூங்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என கேட்டார். இதனை பலரும் கூட ஏளனமாக பேசினார்கள்.

நள்ளிரவில் மனைவியிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பார்கள். இந்த மக்களை நான் என்ன சொல்ல முடியும். நள்ளிரவில் யார் நம் அருகில் இருப்பார்? நமது மனைவிதானே இருப்பார். மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் நள்ளிரவில் வேறு யாராவது இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி கிடையாது” என மிகவும் ஆதங்கத்தோடு பேசினார். சரத்குமார் அவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

7 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

8 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

10 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.