அடித்து நொறுக்கிய 5 கிராமத்து படங்கள்: தயாரிப்பாளரின் கஜானாவை ரொப்பிய சரத்குமார்!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 5 கிராமத்து படங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நாட்டாமை:

எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்து 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம் நாட்டாமை. இதில் சரத்குமார் அண்ணன் தம்பி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தார். இவருடன் குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி ஆகியோரும் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் சாதனை படைத்தது.

சூரியவம்சம்:

சரத்குமாரின் சினிமா கேரியரிலே மிகமுக்கிய படமாக பார்க்கப்பட்டது சூரியவம்சம் திரைப்படம் தான். விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சரத் குமார்,தேவயானி , ராதிகா, மணிவண்ணன், மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒரே பாட்டில் சத்குமார் மட்டுமில்ல இந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது.

நட்புக்காக:

சிம்ரன் – சரத்குமார் ஜோடியாக நடித்து 1998ஆன இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார்இயக்கியிருந்தார். சரத்குமார். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். இந்த படம் தெலுங்கு, மற்றும் கன்னட மொழியிலும் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி:

சரத் குமாரின் ராசியாக ஹிட் இயக்குனரான கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பாட்டாளி படத்தில் ரம்யா கிருஷ்ணன், தேவயானி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இப்படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இருந்தார். சில காரணத்தால் அவர் நடிக்காமல் போக அவர் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க நேர்ந்தது.

சமுத்திரம்:

அழகான கிராமத்து படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட சமுத்திரம் திரைப்படம் 2001 இல் கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் சரத்குமார், முரளி உள்ளிட்டோர் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்கள்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.