மிரட்டும் பா. ரஞ்சித்தின் சர்ப்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் !

13 July 2021, 1:48 pm
Quick Share

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் அட்டக்கத்தி கபாலி காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சன நடராஜன் துஷாரா விஜயன் பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் என டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த படத்தை பா ரஞ்சித் இன் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது

. இந்தப் படத்தின் மேக்கிங் மற்றும் கேஸ்ட் பற்றிய விவரம் சில நாட்களுக்கு முன் வீடியோ வடிவில் வெளியானபோது அதன் எதிர்பார்ப்பு எகிறி இருந்த நிலையில் தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 539

58

3