தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இந்நிலையில், சமீபகாலமாக இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தினால் பெரும் சர்ச்சையை கிளம்பி வருகிறது.
வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்லவே, கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவையே ரணகளம் செய்தனர். இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், விழா ஒன்றில் சத்யராஜிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சத்யராஜ், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும்தான். அது ரஜினி சார் தான் என போட்டு உடைத்திருக்கிறார்.
அதற்கு விளக்கமளித்த அவர், “சூப்பர் ஸ்டார் என்பது சம்பளத்திலும், வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரை குறிக்கும். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் தான் சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஆனால் அவரை ஏழிசை மன்னர் என நாம் அழைத்தோம். அடுத்து எம்ஜிஆர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவரை மக்கள் திலகம் என்று தான் அழைத்தோம்.
ஆனால் ரஜினியை மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறோம். அவரை மக்கள் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது. உலக நாயகன் என்றால் கமல்ஹாசன் தான். அவரை நடிகர் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது. அப்படி பார்த்தால் தளபதி விஜய், தல அஜித் என்று தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்படி போட்டி போட முடியும் என தெளிவாக பேசியுள்ளார். இதன் மூலம் சரத்குமார் பேச்சுக்கு அவர் நோஸ்கட் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.