“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா ? அம்மாவாகிட்டாங்க பாஸ் !

28 February 2021, 10:00 am
Quick Share

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016இல் வெளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் சாட்னா டைட்டஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கு முன்னர், விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தில் தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் இவரின் திறமையை கணித்த விஜய் ஆண்டனி அவருக்கு பிச்சைக்காரன் படத்தில் வாய்ப்பளித்தார். இவர் அதன்பிறகு இரண்டு மூன்று தமிழ் படங்களில் நடித்தார் ஆனால் அதுவும் சரியாக போகவில்லை.

“பிச்சைக்காரன்” படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சாட்னா டைட்டஸ்.

8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் முற்றிலும் நலம். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 12

7

1