நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாத்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ‘காப்பான்’ ‘டெடி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்கள் அடிக்கடி தங்களது லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் தற்போது, ‘டைட்டானிக்’ ஸ்டைலில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகிறது.
Views: - 3241
13
2