நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து பிரபலமானார். இவர் கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து டேட்டிங் செய்துவந்தார். அவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட விஜயலக்ஷ்மி 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிட்டது.
இதையடுத்து கடந்த சில வருடங்களாக விஜயலட்சுமி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரம் ஒரு முடிவில்லாமல் செல்கிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயலக்ஷ்மி, சீமான் தன்னை திருமணம், செய்துவிட்டு ஏமாற்றியதாகவும். இதை வெளியில் சொல்லியதால் அவரது ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறினார். இதனால் விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார். சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் தெரிவித்தார்.
நான் மனைவி, கயல்விழியை துணைவி என்று சீமான் கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து, எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, இப்போது இங்கே வந்து நிற்கிறேன் எனக் கூறிய நடிகை விஜயலட்சுமி பேசுகையில், “என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன். சீமானை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர். மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பத்திரிகையாளரின் கேள்விகளால் கடுப்பான விஜயலக்ஷ்மி, சீமான் கேவலமானவர் தான்.. நான் கை பிடித்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு… படுத்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு…. நீங்க கேட்காதிங்க, என அவர் கூறிய போது, யாரும் அப்படி கேட்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறிய பதிலுக்கு, “நீ வாயை மூடுடா… நீ ஏன்டா பேசுற… பேசாதடா,” என ஒருமையில் பேசி திட்டினார் நடிகை விஜயலட்சுமி.
விஜயலட்சுமி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், எனக்கு பல கோடி கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.