தனுஷ் பசங்க என்னை காரி துப்பிட்டாங்க…. வெட்கமில்லாமல் கூறிய செல்வராகவன்!

Author:
29 July 2024, 2:45 pm

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்பாளியான இயக்குனர் செல்வராகவன் தனுஷின் அண்ணன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இவர் தனுஷை வைத்து 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இருந்தார். அதை எடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ,யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கமென்ன, இரண்டாம் உலகம் , மாலை நேரத்து மயக்கம் ,என் ஜி கே உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி மிகச் சிறந்த இயக்குனராக புகழ் பெற்றார்.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அது குறித்து ஆடியோ லாஞ்சில் தனுஷ் என்னை மிகவும் டார்ச்சர் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்ததாக கூட தெரிவித்திருந்தார். மேலும் நான் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷை எப்படி டார்ச்சர் செய்து நடிக்க வைத்தோனோ அதை அப்படியே அவர் இந்த படத்தில் என்னை பழி வாங்கி விட்டார் என கூறினார் செல்வராகவன்.

இதைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆக்கி வருகிறது. அதில், அவர் என்னுடைய திரைப்படங்கள் நல்லா இல்லை என்றால் தனுஷின் மகன்களான யாத்ரா, லிங்கா இருவருமே காரி துப்பிடுவாங்க. என்ன பெரியப்பா இப்படி படம் எடுத்து வச்சிருக்க? என முகத்துக்கு நேராகவே கேட்டுடு வாங்க. எனவே அவங்க தான் எனக்கு மிகப்பெரிய டஃப் பேசியிருக்கிறார்.

என்னதான் இருந்தாலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இப்படி வெளிப்படையாக வெட்கமில்லாமல் கூறுகிறாரே என ரசிகர்கள் வியந்து போய் விட்டனர். பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தற்போது ராயன் படம் சமயத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 268

    0

    0