கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இமான் அந்த பேட்டியில்… சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என கூறியது தான் அண்டர்லைன் செய்து பேசுகிறார்கள்.
இதனால், உண்மையிலே சிவகார்த்திகேயன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி கொடுத்துஇருக்கிறார். சர்ச்சை பற்றி பேசிய அவர் ‘ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது. வாயை மூடிட்டு இருக்கனும்’ என தெரிவித்து இருக்கிறார். அவர் விஜய் டிவியில் பணியாற்றிய காலதித்திலேயே சிவகார்த்திகேயன் உடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.