என்னை படுக்க கூப்பிட்டவனை அழைத்து நீ கேள்வி கேட்பியா? தொகுப்பாளினியை கிழி கிழின்னு கிழித்த சீரியல் நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பானுமதி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் போயிருக்கீங்களா? என கேட்ட தொகுப்பாளினி ரஹானாவை வெளுத்து வாங்கியிருக்கிறார் சீரியல் நடிகை பானுமதி அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தொகுப்பாளராக இருந்த ரிஹானா பானுமதியிடம் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு போய் இருக்கீங்களா? என கேள்வி கேட்டதும்…. இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறினார் பானுமதி.

ஏனென்றால் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதால் இந்த துறை ஒன்றும் மாறப்போவதில்லை. எனக்குள்ளும் மீரா மிதுன் , வனிதா விஜயகுமார் போன்ற குணங்கள் இருக்கிறது.

ஆனால், நான் அப்படி வாழ விரும்பவில்லை பானுமதியாகவே தான் வெளியில் தெரிய விரும்புகிறேன் என கூறினார். இவன் என்னை கூப்பிட்டான்… அவன் என்னை கூப்பிட்டான் என்று சொல்வதால் இந்த துறை ஒன்றும் மாறிடப் போவதில்லை.

அப்படி இருக்கும்போது எல்லா நடிகைகளிடமும் ஏன் இந்த கேள்வி கேட்கிறீர்கள்? கேள்வி கேட்க முடியும் ஒரு பெண்…. நானும் ஒரு பெண் அப்படி இருக்கும் போது இந்த கேள்வி கேட்பது தவறு என்று உனக்கு தெரியவில்லையா?

இது போன்ற கேள்வியை கேட்டுக் கொண்டு இருப்பதால் தான் ஒட்டுமொத்த மீடியாவும் கெட்டுப் போகிறது. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லி நான் பிரபலமாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லி இந்த நபரை என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டார் என சொன்னால் உடனே அந்த ஆண்மகனை நீங்கள் அழைத்துக் கொண்டு வந்து இந்த பேட்டில் உட்கார வைத்து கேள்வி கேட்பீர்களா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு ரிஹானா திக்கு முக்காட செய்துவிட்டார் பானுமதி.

அதுமட்டுமில்லாமல் எத்தனையோ பேர் பேப்பரை கையில் எடுத்த ரிஹானாவின் பேப்பரை நான் இப்ப கையில் எடுக்கட்டுமா? நீ கேமராவுக்காக சொல்வது எல்லாமே பொய் அப்படின்னு எனக்கு தெரியும்.

நீ உன்னோட அசிஸ்டன்ட்டை ஓட ஓட விரட்டியதும் எனக்கு தெரியும். அவனை ஏன் அப்படி விரட்டினாய் என்ற காரணமும் எனக்கு தெரியும் என பானுமதி கூட ரிஹானா திக்கு முக்காடி போய்விட்டார் .

மேலும் நீ இங்கே உட்கார்ந்து கேமரா முன்னாடி பல பொய்களை பேசி பிரபலமாகி இருக்கிறாய். நான் பேச ஆரம்பித்தால் நீ தாங்க மாட்ட என்று பானுமதி ரிஹானாவின் ரகசியங்களை அவிழ்த்து விட்டு அந்த நிகழ்ச்சியையே திணறடித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பானுமதியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்னதாக பானுமதி போன்றே நடிகர் பிரியா பவானி சங்கரும் சமீபத்தை பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து கேட்டதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.