திரைப்படங்களில் அண்ணன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிப்பவர் நடிகர் அமித் பார்கவ்.தமிழ், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஒளிபரப்பான சீதை தொலைக்காட்சித் தொடரில் இராமர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.
அபிசேக் வர்மன் இயக்கிய 2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடரில் அர்ஜுன் என்ற வேடத்தில் நடிதத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழில், என்னை அறிந்தால் மிருதன்,குற்றம் 23 உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னட மொழித் திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.
அமித் பார்கவ் தொலைக்காட்சி நடிகை ஶ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அந்த பெண் குழந்தைக்கு ஆட்டிஸம் குறைபாடு இருப்பதாக தகவல் பரவியது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அமித் பார்கவ் என்னுடைய மகளுக்கு ஆட்டிஸம் குறைபாடு இல்லை. நாங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவளுக்கு ஆட்டிஸம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டோம். அவளுக்கு Echolalia என்ற பிரச்சனை இருக்கிறது.இதனால் நாம் சொல்லும் சில விஷயத்தை சீக்கிரமாகவே புரிந்து கொள்ள முடியாது, அவ்வளவுதான்.
என் மகள் நன்றாகத்தான் இருக்கிறார் எனதெரிவித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களது மகள் சீக்கிரமே குணமடைந்து விடுவார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.