சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கி தற்போது ஜொலித்து வருகிறார்.
இவர் முதலாவதாக மேயாத மான் படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக, சினிமா துறையில் அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடனும், 10 தல படத்தில் சிம்புவுடனும், ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடனும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அடுத்தடுத்து வெற்றி பெற்றார்.
எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படம் அதனைத் தொடர்ந்து பொம்மை என்ற படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் லியன்ஸ் டைனர் என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்திருக்கிறார். இந்த ஓட்டலை அவர் தனது காதலனுக்காக தான் துவங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது சிங்கிளாக தான் சுற்றி வருகிறார். இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்கையில், அட்ஜஸ்ட்மென்ட் குறித்தும் பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
இவர் சினிமாவில் நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்தும் மனம் திறந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக முதலில் பேச வேண்டும் என்றும், அதைவிட முக்கியமானது அவர்கள் சொல்வதை இந்த சமுதாயம் முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும், அந்த சமயம் அவர்களின் தைரியம் மேலும் செல்லும்.
அதே சமயம் தைரியமாக சொல்லும் பெண்கள் மீது கடைசியில் இந்த சமுதாயம் பழிப்போடவும் தயங்குவதில்லை என்றும், நீ ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை. உனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால் எதற்கு ஒத்துக் கொண்டாய் போன்ற பல்வேறு தேவையில்லாத கேள்விகளை அந்த பெண்ணின் மீது தினித்து வளர்ந்த பிறகு இப்போது வாய் திறக்கிறாயே என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்பதை முதலில் நிறுத்துங்கள் என்றும், அட்ஜஸ்ட்மென்ட் செய்வது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
முக்கியமாக இந்த பிரச்சினையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது பெண்கள் இந்த துறை அந்த துறை அல்லது எந்த துறையில் பணியாற்றினாலும், அவர்களுக்கு உடல், ரீதியாக டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். இது மாதிரி வேலை செய்கிறார்கள் என்று பாகுபாடு இல்லாமல் பல வழிகளில் பெண்களுக்கு தொல்லைகளை கொடுக்கிறார்கள்.
சினிமாவில் இருப்பவர்களிடம் பகிரங்கமாக கேட்டு விடுகிறார்கள். ஆனால், இந்த துறையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது என்று மழுப்பலான சிரிப்புடன் பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
இவர் பேசியதை பார்க்கும்போது ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஆளாக இருப்பது போன்று தெரிகிறது என நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர். ஒருவேளை அதை உடைத்து சொன்னால் அடுத்தடுத்த பட வாய்ப்பு வராமல் போய்விடும் என்பதற்காக எதற்கு வம்பு என்று இலைமறை காயாக பிரியா பவானி சங்கர் பேசுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.