தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது. ரூ. 65 கோடி செலவில் உருவான இப்படம் வெறும் ரூ. 10 கோடி வசூல் ஈட்டி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்ஷம் ஏற்பட்டது.
இதனால் தயாரிப்பாளர் சிட்டிபாபு, இந்த தோல்விக்கு சமந்தா தான் காரணம் என கூறியிருந்தார். மேலும், சமந்தா புஷ்பா படத்திற்கு ஐட்டம் டான் ஆடிஸ்டார் ஹீரோயின் என்ற கேரியர் முடித்துக்கொண்டார். தற்போது அவர் தன்னுடைய படங்களை பிரபலப்படுத்த கீழ்த்தரமான தந்திரங்களை எல்லாம் பயன்படுத்துகிறார்.
அவர் திரையுலகை தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடிக்க தான் வேண்டும். யசோதா படத்திற்கு அவர் கண்ணீர் சிந்தி படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார். ஆனால், இந்த முறை மக்கள் விழித்துக்கொண்டனர். அது ஒர்க் அவுட் ஆகவில்லை.
சிட்டி பாபுவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சமந்தா, ‘ காதுகளில் எப்படி முடி முளைக்கிறது’ என்று தேடினேன். “அதிகரித்த டெஸ்டோஸ்டிரோன்” காரணமாக இது நிகழ்கிறது என்று இணையம் குறிப்பிட்டது. என சமந்தா சிட்டி பாபுவை கிண்டலடித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிட்டி பாபு,
“என் காதில் முடி மற்றும் என் உடலின் பல பகுதிகளில் முடி வளர்வதை அவள் கவனித்திருக்கிறாள், அதைப் பற்றி ஆய்வு செய்து புகாரளிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. “சமந்தாவுக்கு இப்போது 18-20 வயது இல்லை. ரொம்ப வயசானவங்க, சின்ன அழகி சகுந்தலா வேடத்துக்கு அவர் பொருத்தமான தேர்வு இல்லைன்னு சொன்னேன், அதுல என்ன தப்பு?
அவரது கவர்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன, மேலும் துணை வேடங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் இது. அதற்கு எனக்கு அவர் நேரடியாகவே பதில் அளித்து இருக்கலாமே அவரது பதில் சற்றே அநாகரீகம் என்றாலும் இதை துவக்கி வைத்தது சமந்தா தான் அதனால் இந்த சர்ச்சையில் அவருக்கும் பாதி பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சாகுந்தலம் படம் படு தோல்வி அடைந்ததால் சமந்தாவை சிங்கப்படுத்துவகையில் பிரபல ஓடிடி நிறுவனம் அமேசான் ப்ரைம் தளத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென ரிலீஸ் ஆகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது மட்டும் அல்லாமல் அதை பார்த்த ரசிகர்கள், படம் தோல்வி ஆனதால் சமந்தாவை நேரடியாக அவமானப்படுத்துகிறார்கள் என கூறி வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.