விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, இன்று அவரது பிறந்த நாள் என்பதை கூட நெட்டிஷன்கள் நினைக்காமல் கமலஹாசனை கழுவி ஊற்றிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும் கமல்ஹாசனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
இது குறித்து பேசிய ஷகிலா தூக்கு தண்டனை கைதிக்க கூட கடைசி நேரத்துல என்ன ஆசை என்று கேட்பார்கள். ஆனா இவ்வளவு பெரிய ஷோல இருந்து இவ்ளோ பெரிய குற்றச்சாட்டோட வெளிவந்த பிரதீப்க்கு அவர் தரப்பு நியாயத்தை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கல.
இதுல கமல் சார திட்டி ஒரு பிரயோஜனம் இல்ல, இந்த ஷோவ நடத்துறவங்களை தான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு அசிங்கத்தோட அவமானப்பட்டு நான் வெளியில வந்து இருந்தேன்னா நான் கண்டிப்பா தூக்கில் தொங்கி இருப்பேன்.
அந்தப் பையன் ஆல்ரெடி டிஸ்டர்ப்டு ஆன பையன் வேற ஏதாச்சு தப்பான முடிவு எடுத்துட்டா கவின் ஒரு போஸ்ட்டு போட்டு இருந்தாரு, உன் கூட இருக்கிறவங்களுக்கு உன்னை தெரிஞ்சவங்களுக்கும் உன்னை பத்தி தெரியும் மக்கள் சப்போர்ட் உனக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காரு என்று பிரதீப்க்கு ஆதரவாக ஷகீலா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.