அவரை துரத்தி துரத்தி காதலித்தேன்..! பல ஆண்டுகள் கழித்து ரகசியத்தை உடைத்த நடிகை ஷகீலா..!

Author: Vignesh
23 March 2023, 12:30 pm
shakeela-updatenews360
Quick Share

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.

shakeela- updatenews360

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார்.

நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வரும் நடிகை ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, தன் சிறுவயது காதல் அனுபவங்களை பற்றி பல ஆண்டுகள் கழித்து தெரிவித்திருக்கிறார்.

அதில், தான் 10 வயதில் இருக்கும் போது 13 வயதுள்ள சூரி ரெட்டின் என்ற ஒருவனை காதலித்ததாகவும், அப்போது, அது ஒரு பப்பி லவ்வாக இருந்தது என்றும், மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேரை காதலித்ததாகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனிடையே, தன் உறுவினர் ஒருவர் தன்னிடம் ரெண்டு பேரில் யாரை காதலிக்கிறாய் என்று கேட்டதற்கு தான் வீட்டில் இவன் பள்ளியில் அவன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், இன்னொருவர் ஒரு நடிகர் என்றும், எல்லோருக்கும் அவரை தெரியும், அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. பின்னர், இப்போது அவருக்கு கல்யாணமாகிடுச்சி கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் ஒருமுறை கால் செய்யும் போது அவர் பொண்ணாட்டி செய்த செயலை பார்த்து ஆனந்தமாக இருந்தது என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் அமெரிக்காவில் இருப்பதாகவும், மார்ச் 30ஆம் தேதி கடைசியாக பார்த்ததாகவும், அதன்பின் டிசம்பர் மாதம் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், அவரைதான் 10 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், எல்லோருக்கும் தான் பல உதவிகளை செய்திருப்பதாகவும் அந்த போட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவில் இருப்பவர் கோமா ஸ்டேஜிற்கு செல்லும் அளவிற்கு சென்ற போது தான் கடவுளிடம் வேண்டி கொண்டதாகவும் நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.

Views: - 225

1

0