மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி (இன்ஸ்டாகிராம்) சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டு இருந்தார்.
பின்னர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித்குமார் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் அஜித் குமார், மகள் அனோஷ்கா ஆகியோருடன் ஷாலினி உள்ளார். மேலும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் நடிகை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் மகள் அனோஷ்காவின் 15-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்” என நடிகை ஷாலினி பதிவிட்டுள்ளார். மேலும் மகள் அனோஷ்கா உடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.