பீஸ்ட் படம் பார்த்த ஷாலினி அஜித்குமார் : திரையரங்கு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

Author: Rajesh
17 April 2022, 11:08 am
Quick Share

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியானது. இப்படம் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தைப் பார்த்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி விஜய்யின் பீஸ்ட் படத்தை ஷாலினி மற்றும் மகள் அனோஸ்கா இருவரும் சத்யம் திரையரங்கில் பார்த்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாலினி, விஜய் இருவரும் இணைந்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

அதன்பிறகு ஷாலினி, அஜித் திருமணத்திற்குப் பிறகு அஜித் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி ஷாலினியும் இருந்துள்ளார். அண்மையில் அஜித்தின் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

இந்நிலையில் மீண்டும் வலிமை கூட்டணியில் அஜித் 61 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார்

Views: - 518

0

0