இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு பீரியட் படத்தை இயக்கபோகும் ஷங்கர் !
22 January 2021, 1:03 pmஇந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.
அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method. ஆனால்,பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ராஜமவுலி பக்கம் சென்றுவிட்டது.
கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது கட்சி வேளைகளில் கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. தற்போதைய தகவல்படி ஒரு பீரியட் படம் ஒன்றை எடுக்க இருக்கிறாராம் ஷங்கர். அதற்கு கன்னட நடிகரான ‘கேஜிஎப்’ ஹீரோ யஷ் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தும் சிலரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
எல்லாம் நல்லபடியாக நடந்தால் 2026ல் தான் இந்த படம் வெளிவரும் என்று சொல்கிறார்கள்.
0
0