நான் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை.. புது மாப்பிள்ளையுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்..!(வீடியோ)

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோகித் என்பவருடன் ஷங்கரின் முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோகித் போக்சோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் இயக்குனர் சங்கர்.

மேலும் படிக்க: திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. வேறுவழியில்லாமல் காதலரை கரம் பிடித்த கனவுக்கன்னி..!

இவர்களுடைய, நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது. சமீபத்தில், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்கள் வைரலானது. மேலும், தமிழக முதல்வர் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

கார்த்திகேயன் என்பவரை ஐஸ்வர்யா கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் ஷங்கர் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில், தனது மகன் மற்றும் மருமகளுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசி சங்கர் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என்றும், அனைவரும் மணமக்களை மனமாற வாழ்த்த வேண்டும் என்று நெகிழ்ச்சியாக பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய சங்கரின் மருமகன் தருண் கார்த்திகேயன் நான் சங்கர் அங்கிள் அசிஸ்டன்ட் இல்லை. அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். அதனால், நானும் ஐடி படித்திருக்கிறேன். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

35 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

56 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.