மாலையும், கழுத்துமாக இருக்கும் மண்டேலா நடிகை: வைரலாகும் புகைப்படம்!

19 April 2021, 8:51 pm
Quick Share

திரௌபதி பட த்தின் மூலமாக பிரபலமான நடிகை ஷீலா மாலையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆறாது சினம் பட த்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். டூ லெட் படத்தில் முன்னணி ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரௌபதி பட த்தின் மூலமாக ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

இந்தப் படம் கொடுத்த அமோக வரவேற்பு காரணமாக யோகி பாபு நடிப்பில் அண்மையில் தொலைக்காட்சியில் வெளியான மண்டேலா பட த்திலும் நடித்தார். இந்தப் படமும் ஷீலா ராஜ்குமாருக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார். தற்போது மாயதிரை பட த்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடுக்கடலில் படகில் மாப்பிள்ளையுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் ஷீலா ராஜ்குமாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பி சோழன் என்பவரை ஷீலா ராஜ்குமார் திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 92

0

0