ஷிவாங்கியுடன் குத்தாட்டம் போட்ட அஸ்வின்: கோமாளி ஷிவாங்கி ஹேப்பி அண்ணாச்சி!
7 March 2021, 10:27 pm
Behindwoods Gold Icons விருது வழங்கும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், ஷிவாங்கியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
உலகமே வியந்து பார்க்கும் நிகழ்ச்சி எது என்றால், அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படியொரு காமெடியாக கொடுக்கு முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும். அதுவும் இந்த நிகழ்ச்சிதான் என்று அண்மையில், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் – பாலா ஆகியோரது சித்தப்பா – மகன் காம்பினேஷன், ஷிவாங்கி – அஸ்வின் ஆகியோரது லவ் க்ரஷ், ஷிவாங்கி – புகழ் அண்ணன் தங்கை பாசம், ஷகீலா – புகழ் அம்மா – மகன் உறவு முறை, புகழ் – பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா ஆகியோரது லவ் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கும் இருக்கும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் மிகவும் காமெடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகியோரது கெமிஸ்டரி காம்பினேஷனுக்கு ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். உண்மையில், ஷிவாங்கியே அஸ்வினுடன் க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்பதற்கான Behindwoods Gold Icons விருது பெற்ற அஸ்வின், ஷிவாங்கியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9
0