சாம் விஷாலுடன் காதலா? குக் வித் கோமாளி ஃபேம் ஷிவாங்கி விளக்கம்!

16 January 2021, 1:50 pm
Shivangi - Updatenews360
Quick Share

சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் சாம் விஷால் உடனான ரிலேஷன்ஷிப் குறித்து குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சூப்பர் நிகழ்ச்சி என்ற மியூசிக் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரை சூப்பர் சிங்கர் 7 சீசன் வரை நடந்து முடிந்துள்ளது. இந்த 7ஆவது சீசனில் மூக்குத்தி முருகன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஷிவாங்கியும் ஒருவர்.

இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஒரு குக்காக கலந்து கொண்டவர் அஸ்வின். ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ஆகியோரது கெமிஸ்டரி அவர்கள் அடிக்கும் லூட்டி ஆகியவை பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அஸ்வினுக்காக ஷிவாங்கி மற்றும் சுனிதா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், ஷிவாங்கி தற்போது காதலில் விழுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதோடு, சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிப் போட்டி வரை சென்ற சாம் விஷாலை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், ரசிகர்களுடன் உரையாடும் போது பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சாம் விஷால் தனது நண்பர் என்றும், அவர் தான் பாய் பெஸ்டி. அவருடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வேன். அவருடன் வெளியில் சென்று வருவேன். அப்போதெல்லாம் என்னுடைய நண்பர்கள் எல்லோருமே வருவார்கள். ஆனால், தங்களுக்குள் காதல் இல்லை. வெறும் நண்பர்கள் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷிவாங்கி தனியாக விலாக் (VLOG) ஒன்றை தொடங்கி அதில், தன்னைப் பற்றிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சின்னத்திரையில், அதிகப்படியான ரசிகர்கள் கொண்டவர்கள் பட்டியலில், ஷிவாங்கியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0