அண்ணன் தங்கச்சியாக மாறிய பாலாஜி – ஷிவானி, ஆரி – சனம் ! ஷாக்கான ரசிகர்கள்..!
Author: kavin kumar25 August 2021, 8:11 pm
பிக் பாஸ் வீட்டில் ஆரியை எல்லோரும் குறிவைத்து ஓரம் கட்டி வந்தார்கள். யாருமே அவருடன் சப்போர்ட்டுக்கு நிற்கவில்லை. ஆனால் சனம் செட்டி மட்டுமே ஆரிக்கு ஆறுதலாக இருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்போது கூட ஆரியை நேர்மையின் சின்னம் என சனம் ஷெட்டி கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உள்ளே வந்த சனம் செட்டி ஆரியை பார்த்து நான் மீண்டும் உள்ளே வந்தது உங்களைப் பார்க்கத்தான் என்றார். இந்த வார்த்தைகள் ஆரிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அதன்பின் இருவரும் நல்ல நட்போடு பழகி வந்தனர்.
இந்நிலையில் சகோதர சகோதரிகள் கொண்டாடும் ரக்ஷபந்தனை முன்னிட்டு ஆரிக்கு சனம் ஷெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது போஸ்ட்டில், “என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் மிகவும் நன்றி. என்னை நீ ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர வைத்திருக்கிறாய்” என கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, “உங்கள் தங்கையாக இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். நீங்கள் நலமுடன், சந்தோஷமாக வாழ கடவுள் உங்களை வாழ்த்துவார்” என அன்பு மழை பொழிந்துள்ளார். இவர்களை போலவே பாலாஜியும் ஷிவானியும் ஒருவருக்கொருவர் ரக்ஷபந்தன் வாழ்த்து சொல்லி கொண்டது தான் ரசிகர்களிடையே ஷாக்காகி உள்ளனர்.
4
0