கனகாவின் இந்தநிலைக்கு காரணமே வேற.. பயில்வான் வெளியிட்ட உண்மை..!

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.

முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பலர் ஆறுதலாக நம்பிக்கையூட்டும் வகையில் பேசியிருந்தனர்.

சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்துள்ளார் நடிகை கனகா.

இதனிடையே, புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன. ஆனால் அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தியுள்ளார் நடிகை கனகா.

இந்த நிலையில்

மேலும் சொத்துக்களை தன்னிடம் இருந்து யாரவது பறித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கி வந்துள்ளார் கனகா என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கனகா பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருகிறாராம். இவர் யாரிடமும் சந்தித்து பேசுவதில்லையாம். தனி அறையில் இருப்பதாகவும், சில காரணங்களால் மனதளவில் கனகா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தான் கடந்த காலங்களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை என்பதயே மறந்து தற்போது எந்த ஒரு ஆதரவும் இன்றி தனிமையில் வசித்து வரும் கனகாவை திரையில் முகமில்லையெனில் இதுதான் நிலமையோ என்று பரிதாபத்துடன் பார்க்கின்றனர் ரசிகர்கள்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

3 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

4 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

5 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

5 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

6 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

6 hours ago

This website uses cookies.