2 வருசத்துக்கு அப்புறம் முடிக்கப்பட்ட படப்பிடிப்பு: அயலானுக்கு ரூ.100 கோடி வரும்!

25 January 2021, 3:41 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரிடத்திலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால், அடுத்தடுத்து படங்களில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வந்தது.


இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அயலான் படத்தின் கதை விவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் படத்திற்கான கதை எழுதப்பட்டது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு நடைபெற இருந்த கிராபிக்ஸ் பணிகள் 2020 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்கள் கிராபிக்ஸ் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 மாதங்களில் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட இருக்கிறது.


இது குறித்து கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எங்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நீங்கள் திரையில் பார்க்கும் வரையில் எங்களால் காத்திருக்க முடியாது. எனினுன், இன்னும் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு நீங்கள் பார்த்திராத வகையில், புதிய படமாக அயலான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுல் ப்ரீத் சிங் அவருக்குரிய பகுதிகளை முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அயலான் முழு படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே, அயலான் படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.


சைன்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அயலான் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் தேவைப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும். அப்படியில்லை என்றால் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்தப் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0