முதல்முறையாக Baby bump புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரேயா.. கர்ப்பத்தின் போது கணவனுடன் ஒரே கொண்டாட்டம்தான்…!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 5:13 pm
Shreya 1 - Updatenews360
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

கொரோனா சமயத்தில் பிரசவம் தரித்த ஸ்ரேயா, இதனை வெளியே கூறவில்லை. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன பிறகுதான் அந்த உண்மையை போட்டுடைத்தார். இதனால், ரசிகர்கள் அதிர்ந்து போகினர்.

அவ்வப்போது, கர்ப்ப காலத்து புகைப்படங்களை மெதுவாக அம்மணி கசிய விட்டு வருகிறார்.

Shreya - Updatenews360

இந்த நிலையில், தன்னுடை Baby bumpஐ கணவருடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

Views: - 381

1

0