“லப்பர் பந்து”- படத்தில் நடிக்க மறுத்தேன்… ரகசியத்தை உடைத்த நடிகை ஸ்வாஷிகா!

Author:
14 November 2024, 6:23 pm

“லப்பர் பந்து”- திரைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் தான் லப்பர் பந்தது. இந்த திரைப்படத்தை தமிழரசன் பச்சை முத்து இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் தினேஷ் , ஸ்வாஷிகா, ஹரிஷ் கல்யாண்,பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

நடிகை சுவாசிகா

இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிகை சுவாசிகா நடித்திருப்பார். மலையாள நடிகை ஆன இவர் சில மலையாள திரைப்படங்களிலும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவரை தமிழில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது இந்த லப்பர் பந்த திரைப்படத்தில் தான்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு மாமியாராக அவர் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யான் விட வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பேசிய நடிகை ஸ்வாஷிகா முதலில் இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தபோது இந்த படத்தில் நடிக்கவே நான் மறுத்தேன் .

நடிக்க மறுத்தேன்…

காரணம் வயது தான். ஆனால் என்னுடைய அந்த யசோதா கதாபாத்திரம் என்னை ஏதோ செய்தது. அதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். பல பேர் இந்த கேரக்டரில் நடிக்கவே மறுத்தார்கள். எனவே வயதை காரணம் காட்டாமல் அந்த கதாபாத்திரத்தில் உள்ள முக்கியத்துவத்தை பார்த்து நடிக்க வேண்டும் என சுவாசிக்கா அந்த பேட்டி கூறியிருக்கிறார்.

  • Allu Arjun Pushpa 2 controversy பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
  • Views: - 213

    0

    0