“விவாகரத்திற்கு பின் இப்போதான் மகிழ்ச்சியாக இருக்கேன்” – விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை !

5 February 2021, 8:34 pm
Quick Share

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வேதா பாசு, திருமணமான ஒரு வருடத்தில் கணவரை பிரிந்து விட்டதாக கூறியிருக்கிறார். இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு. தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் ஸ்வேதா பாசு கைதான சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2018 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில்,

கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். திருமணம் ஆனவுடன் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா பாசு, விவாகரத்து பெற்ற அடுத்த நாளே கடற்கரையில் பிகினி உடையில் உடல் அழகை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட ஆராம்பித்தது யாராலும் மறக்க முடியாது.

தற்போது படங்களிலும், சீரியல்கள் மற்றும் வெப்சீரீஸ்களிலும் நடிக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ”விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். விவாகரத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது” என்றார் ஸ்வேதா.

Views: - 0

0

0