பணம் அனுப்பட்டுமா..? எலான் மஸ்க்கிடம் வாரிசு நடிகரின் மகன் கேட்ட கேள்வி.. வைரலாகும் ட்வீட்..!!

Author: Vignesh
3 November 2022, 8:15 pm
elon musk -updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். கடைசியாக அவரது நடிப்பில் மாயோன் படம் வெளியானது. தொடர்ந்து வட்டம், ரேஞ்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருடைய டிவிட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது டிவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் பயனாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Sibi - updatenews360

ரெட்மி டிவிகளில் இருந்து சிறந்த விற்பனையாளர்களை, உங்கள் குடும்பத்திற்கு ஒரு பொழுதுபோக்கின் தொகுப்பை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்! அதிக தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்து பலன்களைப் பெறுங்கள்.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத எலான் மஸ்க் ப்ளூ டிக் பெற 8 டாலர் நிச்சயம் வசூலிக்கப்படும் என பதிவிட்டிருந்தார்.

Sibi - updatenews360

இதனை பார்த்த நடிகர் சிபி சத்யராஜ், தங்களின் GPay எண்ணை கொடுங்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 332

0

0