சித்தார்த்தை சுற்றி வளைத்த இளம் பெண்கள்… பாவம் மனுஷன் விட்டுடுங்கம்மா – டூயட் வீடியோஸ்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .

கடைசியாக டக்கர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரமோஷன் நேர்காணலில் அப்படத்தின் பாடலுக்கு இளம் பெண்கள் அவருடன் டூயட் பாட ஆசைப்பட்ட நடனமாடிய வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம்மா எத்தனை பேருமா போதும் நிறுத்துங்க…. பாவம் அந்த மனுஷன் என நெட்டிசன்ஸ் எல்லோரும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

https://www.instagram.com/p/Cto9YklBqds/?hl=en

Ramya Shree

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

38 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

42 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

1 hour ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.