அந்த தொழில் செய்த போது நிறைய செருப்படி வாங்கினேன்… மோசமான அனுபவத்தை பகிர்ந்த சித்தார்த்!

43 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .

இந்நிலையில் தன்னுடைய கடைசி படமான டக்கர் படத்தின் ப்ரோமோஷனில் பேசி வரும் சித்தார்த், எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் கலந்துக்கொள்ளும் மேடையில் கூட நான் அமரமாட்டேன் அவன் பிரதமராக இருக்கட்டும், முதல்வராக கூட இருக்கட்டும் என கூறினார். மேலும் எங்கேயேனும் பல்பு வாங்கிய மோசமான அனுபவம் உண்டா என கேட்டதற்கு, ஆமாங்க நிச்சயமா… நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது நிறைய செருப்படி வாங்கியிருக்கேன் என ஓப்பனாக கூறினார்.

https://www.youtube.com/shorts/eLvpcOfnPOo
Ramya Shree

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

13 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.