கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தார்த் கலந்துகொண்டபோது பத்திரிக்கையாளர் ஒருவர் இயக்குனர் ஷங்கரிடம் ஊழல் குறித்து கேள்வியெழுப்பியபோது ஷங்கர் பதிலளிக்க முற்பட்டார். அந்த சமயத்தில் திடீரென இடையில் தனது மைக்கில் பாடத்தொடங்கினார் சித்தார்த். “இயக்குனரையே பேசவிடாமல் சித்தார்த் ஓவர்டேக் செய்கிறாரே” என்று ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
அதனை தொடர்ந்து பல பேட்டிகளில் சித்தார்த் பேசிய பல விஷயங்கள் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தன. “இவர் ஓவராக வாய்விடுகிறார்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இவர் ஒரு பேட்டியில் “இந்தியன் 2” திரைப்படத்தை மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால் அத்திரைப்படம் தோல்வியை கண்டது. “இவர் ஓவராக பேசியதால் அத்திரைப்படம் ஃப்ளாப் ஆனது” என சில ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சித்தார்த் தற்போது “3BHK” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சரத்குமார், தேவயானி ஆகியோர் சித்தார்த்திற்கு பெற்றோராக நடித்துள்ளனர். மேலும் மீதா ரகுநாத் சித்தார்த்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.
“எட்டு தோட்டாக்கள்”, “குருதியாட்டம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அம்ரித் ராம்நாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் அருண் விஷ்வா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வாடகை வீட்டில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் எப்படியாவது தனக்கென ஒரு சொந்த வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவில் கடுமையாக உழைக்கிறது. சொந்த வீடு கட்ட அவர்களுக்கு பல தடைகள் வருகிறது. அப்படிப்பட்ட தடைகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற கதையம்சத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. “Good Night”, “Tourist Family” ஆகிய திரைப்படங்களின் வரிசையில் ஒரு மிகச்சிறந்த மனதிற்கு நெருக்கமான Family Drama திரைப்படமாக இது அமையும் என இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில் தெரிய வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த டிரெயிலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் சிலர், “சித்தார்த் கொஞ்சம் அமைதியாக இருந்தால் இந்த படம் நிச்சயம் ஓடும்” என ட்ரோல் செய்தும் வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.