சிம்புக்கு ஜோடியான அசின்.. வெளியான First Look போஸ்டர்.. இந்த சம்பவம் எப்போ நடந்துச்சு?..

Author: Vignesh
3 ஜூன் 2024, 7:16 மணி
simbu
Quick Share

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.

simbu

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டார். அப்போது, ரெட்கார்டு, விவகாரம் பற்றி பேசி உள்ளார். ரெட் கார்டு விஷயம் வதந்தி தான் எங்களுக்கு நடுவில் சில பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். அதை பேசி தீர்த்துக் கொண்டோம் என தெரிவித்திருக்கிறார். மேலும், வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வருவதாக தெரிவித்து இருந்தார்.

simbhu

மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!

முன்னதாக, மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் தற்போது சிம்பு நடித்து வருகிறார். மேலும், சிம்புவின் கைவசம் எஸ்டிஆர் 48 திரைப்படமும் உள்ளது. இப்படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி தான் இப்படத்தில் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu

நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று AC. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்த நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

simbu
  • Vijay TVK அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
  • Views: - 199

    0

    0